மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக செல்லும் தண்ணீர்
22-Sep-2025
கமுதி; கமுதி அருகே உடையார் கூட்டம் பஸ் ஸ்டாப் அருகே நடுரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் ரோடு சேதமடையும் நிலை உள்ளது. கமுதி அருகே உடையார் கூட்டம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் பயன்படுத்துவதற்காக கமுதி - முதுகுளத்துார் ரோடு உடையார்கூட்டம் பஸ் ஸ்டாப் அருகே போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் செல்வதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகுளத்துார் உடையார் கூட்டம் விலக்கு ரோடு அருகே குழாய் உடைந்து தண்ணீர் நடு ரோட்டில் வீணாகிறது. இதனால் ரோடு சேதமடையும் அபாயம் உள்ளது. அத்தியாவசிய தேவைக்காக தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். ரோடு சேதமடையும் நிலை இருப்பதால் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த னர்.
22-Sep-2025