உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மதுபாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டத்தை  செயல்படுத்த மாட்டோம்

 மதுபாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டத்தை  செயல்படுத்த மாட்டோம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.,26) முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று மண்டல மேலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி கூறியதாவது: டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்கள் பற்றாக்குறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது.மதுபாட்டில்களை சேகரிக்க போதிய கட்டமைப்பு, ஆட்கள் நியமிக்கப்படவில்லை. டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல் புதியவர்களை நியமித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை எங்களது கடைகளில் செயல்படுத்த மாட்டோம். மது பாட்டில்களை வாங்க வற்புறுத்தினால் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி சாவியை ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ