எப்போது விமோசனம்: வீடுகள் அருகே குளம்போல தேங்கிய கழிவுநீர் நாறுதுங்க
வீடுகள் அருகே குளம்போல தேங்கிய கழிவுநீர்நாறுதுங்க.. நடக்க முடியல.. மக்கள் பரிதவிப்புராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம்பிள்ளை ஊருணி, குண்டூரணி, நாகநாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன.நான்கு இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பபட்டு கழுகூரணியில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.குழாய்கள் சேதமடைந்து, அடைப்புகள் காரணமாக கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக நகரில் பல இடங்களில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது. ரோட்டில நடக்க முடியல
குறிப்பாக அகில் கிடங்கு வீதி, காயக்காரி அம்மன் கோவில் தெருவில் குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளது.சிங்கார தோப்பு, தினமலர் நகர் பகுதியிலும் கழிவுநீர் தேங்குகிறது.துர்நாற்றத்தால் குழந்தைகள், முதியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால் டெங்கு அச்சத்தில் மக்கள் உள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தாலும் பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சு எடுக்கின்றனர். மீண்டும் அன்று இரவே குளம்போல கழிவுநீர் தேங்கி விடுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், நகரில் பாதாள சாக்கடை அடைப்பு, குழாய் சேதங்கள் சரி செய்யப்படுகிறது. அகில் கிடங்கு வீதியில் கழிவுநீரை அகற்றுகிறோம். சிங்காரதோப்பு கழிவுநீர் நிலையத்தில் கிணற்று பம்பிங் வழியில் அடைப்பால் கழிவுநீர் தேங்குகிறது. முழுமையாக பம்பிங் செய்து சரிசெய்யும் பணி நடக்கிறது. நாளை (இன்று) சரியாகிவிடும் என்றார்.