உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மான்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்க  வயல் ஓரங்களில் வெள்ளை சாக்குகள்

மான்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்க  வயல் ஓரங்களில் வெள்ளை சாக்குகள்

திருவாடானை: மான்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வயல் ஓரங்களில் ஆட்கள் நிற்பது போல் வெள்ளை சாக்குகளை விவசாயிகள் கட்டி வைத்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. மங்களக்குடி, ஆண்டா வூரணி, அடுத்தகுடி, கூகுடி போன்ற பல கிராம வயல்களில் நெற்பயிர்கள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மான்கள் பயிர்களை மேய்வதால் பெரும் சேதம் ஏற்பட்டு விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர். இதனால் வயல் ஓரங்களில் வேலி அமைத்தல் போன்ற பல வழிகளை கையாளுகின்றனர். இது குறித்து விவ சாயிகள் கூறியதாவது: அனைத்து கண்மாய் களிலும் மான்கள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. பயிர்களை மான்கள் தின்று அழிப்பதால் மகசூல் குறைந்து பெரும் இழப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மான்கள் கூட்டமாக வருகின்றன. மான்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்க கம்பி வேலி அமைக்க அதிக செலவு ஆகும் என்பதால் வயல் ஓரங்களில் கம்புகளை நட்டு வெள்ளை சாக்கு பைகளை கட்டி வைத்துள்ளோம். பார்ப்பதற்கு மனிதர்கள் நிற்பது போலவும், பலத்த காற்று வீசும் போது சாக்கு சத்தத்தை கேட்டு மான்கள் அச்சத்துடன் ஓடிவிடும். பெருகி வரும் மான்கள் கூட்டத்தை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி