பறவைகள் சரணாலயத்தில் வன உயிரின வாரவிழா
சாயல்குடி : - சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது. கீழக்கரை வனச்சரக அலுவலர் கவுசிகா தலைமை வைத்தார். வனவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். பைனாகுலர் மூலமாக வெளிநாட்டு பறவைகளின் வாழ்விடங்கள் பார்க்கப்பட்டது. அரியவகை பறவையினங்கள் அவை வாழக்கூடிய தகவமைப்பு மற்றும் பண்டிகை காலங்களில் பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வனக்காப்பாளர் யுவராம் செய்திருந்தார். இதில் வனக்காப்பாளர்கள் சோமு ராஜ், பிரபு மற்றும் பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்றனர்.