உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அம்மா உணவகம் பராமரித்து சீரமைக்கப்படுமா

பரமக்குடி அம்மா உணவகம் பராமரித்து சீரமைக்கப்படுமா

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பராமரிப்பில்லாத அம்மா உணவகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி அம்மா உணவகம் 2015 மே மாதம் ரூ.25 லட்சத்தில் கட்டி திறக்கப்பட்டது. அன்று முதல் காலை, மதியம் ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர். கொரோனா காலத்தில் அம்மா உணவகம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட பாதை சேதமடைந்துள்ளதுடன் உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன.கை கழுவுவதற்கு குழாயில் தண்ணீர் இல்லாத நிலையில் வெளியில் அண்டாவில் ஊற்றி வைத்துள்ள தண்ணீரில் கை கழுவ நேர்வதால் பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் கழிவு நீரில் பாசி படர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின்விசிறிகள் இயங்காமல் உள்ளதுடன், கிச்சன் உள்ளிட்டவைகளும் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.எனவே உணவுகளை முறையாக கொடுக்கும் பட்சத்தில் வழக்கம் போல் மக்களும் விரும்பி சாப்பிடும் இடமாக அம்மா உணவகம் மாறும். நகராட்சி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ