உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட நுாலகத்தில் தேங்கிய புத்தகங்கள் கிளை நுாலகங்களுக்கு செல்லுமா

மாவட்ட நுாலகத்தில் தேங்கிய புத்தகங்கள் கிளை நுாலகங்களுக்கு செல்லுமா

ராமநாதபுரம்; ராமநாதபுரம் கிளை நுாலகங்களுக்கு கொள்முதல் செய்த புத்தகங்கள் மாவட்ட நுாலகத்திற்கு வந்த நிலையில் அவை பிரித்து அனுப்பப்படாமல் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 88 கிளை நுாலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகங்களில் போதிய அளவில் புத்தகம் இல்லை என வாசகர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்க நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் ராமநாதபுரம் மாவட்ட நுாலகத்திற்கு வந்த நிலையில் கிளை நுாலகங்களுக்கு பிரித்து வழங்காமல் ஒரு மாதமாக தேங்கி காணப் படுகிறது. நுாலக அலுவலர்கள் கூறியதாவது: தமிழக அரசு முந்தைய காலங்களில் மொத்தமாக புத்தகங்கள் கொள்முதல் செய்து நுாலகங்களுக்கு வழங்கி வந்தது. தற்போது ஒவ்வொரு நுாலகத்திற்கும் எந்த புத்தகம் வேண்டும் என அப்பகுதி வாசகர்களிடம் கருத்து கேட்டு அதன்படி புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கிய புத்தகங்கள் மொத்தமாக மாவட்ட நுாலகத்திற்கு வந்துள்ளது. கிளை நுாலகங்கள் கேட்ட நுால்களை பிரித்து அவற்றை அனுப்ப வேண்டும். ஆனால் போதிய பணியாளர்கள் இல்லாததால் நுால்கள் தேங்கி காணப் படுகின்றன. விரைவில் அனைத்து நுால்களும் பிரித்து கிளை நுாலகங்களுக்கு அனுப்பப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை