உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

 சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். ராமநாதபுரம் நயினார்கோவில் அருகே உள்ள குளத்துார் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெயசங்கர் என்வரின் பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக வீட்டின் சுவரை இடித்த போது சுவர் சரிந்து குமார் மேல் விழுந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய குமாரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவருடன் கட்டுமான வேலைக்கு வந்த திரிலோகநாதன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை