கமுதக்குடி என்.டி.சி., மில் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மில்லை இயக்க வலியுறுத்தல்
பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடியில் பயோனியர் ஸ்பின்னர்ஸ் மில் முன்பு என்.டி.சி., நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய2024 நவ., முதல் மே 2025 முடிய 7 மாதம் சம்பளம் வழங்க வேண்டும். 2019 முதல் 2025 வரை 6 ஆண்டு போனஸ் தொகை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பயன்களை முழுமையாக வழங்க வேண்டும். மூடப்பட்ட என்.டி.சி., ஆலையை திறந்து இயக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் தொழிற்சங்க தலைவர் வீரமுருகன்தலைமை வகித்தார். பி.எம்.எஸ்., சங்க செயலாளர் பாலமுருகன், எச்.எம்.எஸ்., சங்க தலைவர் ஜெகதீஷ், ஐ.என்.டி.யூ.சி., செயலாளர் வீரசெல்வம், சி.ஐ.டி.யு., செயலாளர் குமரி ஆனந்தன், எல்.பி.எப்., தலைவர் சண்முகநாதன், ஏ.டி.பி., தலைவர் ராமகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். முன்னதாக மில் முன் கூடிய தொழிலாளர்கள், என்.டி.சி., பொது மேலாளர் சிவசாம்ராஜ் வந்த போது உள்ளே செல்ல விடாமல் தடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., கணேசமூர்த்தி, வி.ஏ.ஓ., கமலேஷ் உள்ளிட்டோரின் பேச்சு வார்த்தைக்கு பின் சமாதானம் அடைந்தனர். தொடர்ந்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மேலாளர் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.