உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடுகளை பாதுகாக்க கொசுவலை பயன்படுத்தும் தொழிலாளர்கள்

ஆடுகளை பாதுகாக்க கொசுவலை பயன்படுத்தும் தொழிலாளர்கள்

ஆர்.எஸ்.மங்கலம்: மழைக்காலத்தில், கொசுக்கடியில் இருந்து ஆடுகளை இரவில் பாதுகாக்கும் விதமாக ஆட்டு பட்டியை சுற்றிலும் கொசு வலையை தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு கிராமங்களிலும் அதிகப்படியான விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். மாடுகளைப் பொறுத்த வரை இரவில் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கும் விதமாக புகை மூட்டி ஓரளவு கொசுக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால், மொத்தமாக பட்டியில் அடைக்கப்படும் ஆடுகளுக்கு புகைமூட்டம் பலன் அளிக்காது. இதனால், இரவில் ஆடுகள் அடைக்கப்படும் இடத்தை சுற்றிலும் கொசு வலையால் தொழிலாளர்கள் கூடாரம் அமைத்து அதில் ஆடுகளை அடைத்து வருகின்றனர். இதனால், இரவில் கொசுக்கடியில் இருந்து ஆடுகள் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி வருகின்றன. இதன் காரணமாக கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் மேடான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ