உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக கடலோர துாய்மை தினம்: ராமேஸ்வரத்தில் உழவார பணி

உலக கடலோர துாய்மை தினம்: ராமேஸ்வரத்தில் உழவார பணி

ராமேஸ்வரம் : உலக கடலோர துாய்மை தினத்தையொட்டி ராமேஸ்வரம் கடலோரத்தில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் உழவார பணிகள் நடந்தது. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் இணைந்து கடலோரத்தை துாய்மை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் உழவார பணி செய்தனர். இதில் 590 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள், பேய் வலைகள், பாலிதீன் பைகளை சேகரித்து துாய்மை செய்தனர். இந்திய கடற்படை ராமேஸ்வரம் முகாம் அதிகாரி தினேஷ்குமார், தேசிய கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாரிகவுடா, ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் தமிழ் அழகன், ராமநாதபுரம் நுகர்வோர் கூட்டமைப்பு செயலாளர் ஜெயகாந்தன், ராமேஸ்வரம் அப்துல்கலாம் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன், கிராமத் தலைவர் ஜெரோன்குமார், யாத்திரை பணியாளர் சங்க செயலாளர் வெள்ளைச்சாமி, கல்லுாரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். கடலில் சுத்தம் 2025 ஸ்வச் சாகர், சுரஷித் சாகர் திட்டத்தில் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் சார்பில் ஸ்கூபா டைவிங் தன்னார்வலர்களுடன் சேர்ந்து நேற்று ராமேஸ்வரம் கடலுக்குள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கடலுக்கு அடியில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகள், சேதமடைந்த வலைகளை சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ