உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண் கல்லுாரியில் உலக மண் தினம்

வேளாண் கல்லுாரியில் உலக மண் தினம்

கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரியில் உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார்.முதல்வர் திருவேணி வரவேற்றார். இயற்கை விவசாயி ராமர் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்தும், மண்வளம், இயற்கை இடுபொருட்களை வைத்து மண்வளத்தை பேணி காப்பது குறித்து பேசினார்.பின் தனது நிலத்தில் பல ஆண்டுகளாக இயற்கை உரத்தை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் லாபத்தை பற்றியும், இதன் மூலம் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை