உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர்வதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.2024-25ம் ஆண்டு அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்வதற்கு ஏப்.,16 முதல் www.tncu.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மே 1ல் குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். மே 6 வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.இப்பயிற்சி தொடர்பான விபரங்களுக்கு 88254 11649, 95781 63661 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ