உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்; பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு பட்டியலிட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் விண்ணப்பித்த மாணவர்கள், https://scholarships.gov.inஎனும் இணையதளத்தில் 2025--26ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் ஒன்பது, பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் தங்களது விவரங்களை உரிய ஆவணங் களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க செப்.,30 கடைசி நாள். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க அக்.,15 கடைசி நாள். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அல்லது மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ள கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை