உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காதல் தகராறில் கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

காதல் தகராறில் கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

தொண்டி: தொண்டியில் காதல் தகராறில் 2 பேரை கத்தி, வாளால் வெட்டிய சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தொண்டியை சேர்ந்த 17 வயது மாணவி திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவரை தொண்டியை சேர்ந்த ஒரு மாணவனும், மானாமதுரையை சேர்ந்த மற்றொரு வாலிபரும் காதலித்தனர். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து தொண்டியில் இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்காக இருவரின் ஆதரவாளர்களும் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தகறாறு ஏற்பட்டது. மானாமதுரையை சேர்ந்தவர்கள் வாள், கத்தியால் வெட்டியதில் தொண்டி காந்தி நகரை சேர்ந்த சத்யபிரசாத் 26, நம்புதாளை முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரையை சேர்ந்த கவிபாண்டி 24, என்பவரை தொண்டி எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை