உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் தீர்த்த குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

ராமேஸ்வரம் தீர்த்த குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

ராமேஸ்வரம் : -ராமேஸ்வரத்தில் இறுதி சடங்கு ஊர்வலத்தில் சென்ற இளைஞர் தீர்த்த குளத்தில் மூழ்கி பலினார்.ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் வடக்கு தெரு சேர்ந்த மோசன் மகன் மணிகண்டன் 31.இவரது பக்கத்து வீட்டில் உள்ள பாலு என்பவரின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்க உறவினர், நண்பர்களுடன் ராமர் தீர்த்த குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். மணிகண்டன் குளத்தில் நீந்தும்போது நடுவில் உள்ள கருங்கல் மண்டபம் தெப்பத்தில் ஏற முயன்று நிலை தடுமாறி மீண்டும் குளத்திற்குள் விழுந்து மூழ்கினார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மணிகண்டன் உடலை மீட்டனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்