மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
15 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
15 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
15 hour(s) ago
பரமக்குடி வழியாக மதுரை பயணம்பரமக்குடி; உத்தரகாண்ட் இளைஞர் ரன்வீர்சிங் 23, இந்தியா முழுவதும் உள்ள 30 ஹிந்து கோயில்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் ராமேஸ்வரம் சென்று பரமக்குடி வழியாக மதுரை நோக்கி பயணித்துள்ளார்.இந்தியா முழுவதும் ஹிந்து கோயில்களுக்கு 40 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரையாக சென்று வழிபடும் நோக்கில் உத்தரகாண்ட் சேர்ந்த இளைஞர் ரன்வீர்சிங் புறப்பட்டுள்ளார். இவர் பல்வேறு மாநிலங்களை கடந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி வழிபட்டு பரமக்குடி வழியாக மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.பரமக்குடியில் அவர் கூறியதாவது: ஹிந்து கோயில்களுக்கு பாதயாத்திரை செல்லும் நோக்கில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் லிங்கத்தை தரிசனம் செய்துள்ளேன். தொடர்ந்து தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். 30 முக்கிய ஸ்தலங்களுக்கு செல்ல முடிவு செய்து வந்துள்ளேன். எனது பாதயாத்திரையை அமர்நாத் சென்று முடித்துக் கொள்ள உள்ளேன், என்றார்.பாதயாத்திரை மேற்கொண்டுள்ள இவர் தனது முதுகில் சுமந்து செல்லும் பையில் அனுமன் படம் பொறித்த காவி கொடி, தேசியக் கொடியையும் சுமந்து செல்கிறார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago