உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அரக்கோணம்,:அரக்கோணம் அடுத்த பாக வீடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளி இவரது மகன் பிரசன்னா 10. இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றார்.குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்.தகவல் அறிந்த அரக்கோணம் போலீசார் மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணி சிறுவனை குளத்தில் தேடி சடலமாக மீட்டனர். பின் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !