உள்ளூர் செய்திகள்

போலி டாக்டர் கைது

வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 72; பி.யூ.சி., படித்து, 40 ஆண்டுகளாக வீட்டிலேயே நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தார். வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் தினேஷ் தலைமையிலான குழுவினர், போலீசார் உதவியுடன் நேற்று ஜெயவேல் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது, அவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரை வாலாஜா போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் 40 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். சிகிச்சைக்காக வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி