| ADDED : ஜூலை 31, 2024 01:57 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, மது குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவியை, கத்தியால் குத்தி கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், காரை பூங்கா கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அரவிந்த், 34. இவர் மனைவி லட்சுமி, 26. இவர்களுக்கு, 4 வயது மகள், 2 வயது மகன் உள்ளனர். லட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.கடந்த சில நாட்களாக அரவிந்த், எந்த வேலைக்கும் செல்லாததால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த கணவர் அரவிந்தை, மனைவி லட்சுமி கண்டித்தார். ஆத்திரமடைந்த அரவிந்த் கத்தியால் குத்தியதில், லட்சுமி உயிரிழந்தார்.ராணிப்பேட்டை போலீசார், அரவிந்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.