உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

அரக்கோணம்:அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 37, மற்றும் சாந்தி, 40, ஆகிய இருவரையும், அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி, ராணிப்பேட்டை எஸ்.பி., கிரன் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன்படி, மணிகண்டன் மற்றும் சாந்தி ஆகிய இருவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று முன்தினம் கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். இதையடுத்து, மணிகண்டனை சேலம் மத்திய சிறையிலும், சாந்தியை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ