மேலும் செய்திகள்
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
04-Mar-2025
ஆற்காடு:ஆற்காடு அருகே 100 ஆண்டு பழமையான ஆலமரம் வெட்டப்பட்டதைக் கண்டித்து, கிராம மக்கள் ஒப்பாரி வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு - செய்யாறு சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலையோரம் மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதில், புதுப்பாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வெட்டப்பட்டு, அடியோடு அகற்றப்பட்டது.இதனால், பா.ம.க., பசுமை தாயகம் மற்றும் கிராம பெண்கள் மரம் வெட்டப்பட்ட இடம் வரை ஊர்வலமாக சென்று, வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்களை துாவியும், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி, ஒப்பாரி வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வெட்டப்பட்ட ஆலமரத்தை வேறு இடத்தில் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
04-Mar-2025