உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மாணவி கர்ப்பம் ஆட்டோ டிரைவர் கைது

மாணவி கர்ப்பம் ஆட்டோ டிரைவர் கைது

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணபதி, 23. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், 17 வயது, பிளஸ் 2 மாணவியை, பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று விட்டு வந்தார்.அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்ததில், ஆட்டோ டிரைவர் கணபதி, மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிந்தது. நெமிலி போலீசார், கணபதியை 'போக்சோ'வில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி