உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தி.மு.க., கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

தி.மு.க., கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

நெமிலி: அமைச்சரை வரவேற்க வைத்த தி.மு.க., கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சைனபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார்; தி.மு.க., மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். இவரது இல்ல திருமண விழா நேற்று காலை பானாவரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.இதில், அமைச்சர் காந்தி, எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்கள் வருகையையொட்டி, கட்சி கொடிக்கம்பம், தோரணம், விளம்பர பிளக்ஸ் சாலையோரம் வைக்கப்பட்டிருந்தன.திருமணம் முடிந்த நிலையில், பிளக்ஸ் பேனர், கட்சி கொடிக்கம்பம், தோரணத்தை தொழிலாளி குமார், 48, அகற்றினார். கொடியுடன் கூடிய இரும்பு கம்பத்தை அகற்றியபோது, மேலே சென்ற மின் கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி