உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மனைவியை கடித்த கணவன் பிடிபட்டார்

மனைவியை கடித்த கணவன் பிடிபட்டார்

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே நெல்வாய் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 38. லாரி டிரைவர். இவருக்கு, 15 ஆண்டுகளுக்கு முன், ஜெயசித்ரா, 34, என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்த ஜெயசித்ரா, ஐந்து ஆண்டுகளாக தாய் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, மாமியார் வீட்டிற்கு சென்ற புருஷோத்தமன், குடும்பம் நடத்த வருமாறு ஜெயசித்ராவை அழைத்தார். மறுப்பு தெரிவித்த அவரை தாக்கி, உடல் முழுதும் கடித்தார்.வலி தாங்க முடியாமல் ஜெயசித்ரா அலறினார். இதையடுத்து ஜெயசித்ரா புகாரில் நெமிலி போலீசார், புருஷோத்தமனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை