உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சேதமடைந்த சாலை சீரமைப்பு

சேதமடைந்த சாலை சீரமைப்பு

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர் வழியாக, பனப்பாக்கம் செல்லும், 13 கி.மீ., துார நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம், புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர் தினமும் சென்று வருகின்றனர்.கடந்தாண்டு ஜூன் மாதம் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியது. செப்டம்பர் மாதம் நெடுஞ்சாலை துறையினர் பள்ளங்களில் ஜல்லிக் கற்களை கொட்டி செப்பனிட்டனர். தென்மேற்கு பருவ மழையால், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக இருந்தன. இதனால், விபத்து ஏற்படும் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, அரக்கோணம் நெடுஞ்சாலை துறையினர் நேற்று முன்தினம் பள்ளங்களில் சிமென்ட் ஜல்லி கலவை கொட்டி, ரோலர் வாகனம் வாயிலாக சமன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அந்த பள்ளத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது, ஜல்லிக் கற்கள் பெயரும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளூர்- - பனப்பாக்கம் சாலையில், தார் கலவை வாயிலாக செப்பனிட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை