உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கார் மோதி பள்ளி மாணவி பலி பார்த்தவர் அதிர்ச்சியில் சாவு

கார் மோதி பள்ளி மாணவி பலி பார்த்தவர் அதிர்ச்சியில் சாவு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி திடீர் நகரை சேர்ந்தவர் சங்கர் 40. இவர் மனைவி சங்கீதா 35. இவர்களது மகள் பிரியா 15 அதே பகுதியிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் சங்கர் தன் மகள் பிரியாவுடன் வீட்டின் அருகே வெளியே நின்றிருந்தார். அவ்வழியாக அதிவேகமாக வந்த 'மாருதி சுசுகி' கார் சங்கர் மற்றும் பிரியா மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.இருவரையும் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றபோது வழியிலேயே பிரியா இறந்தார். சங்கர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சங்கரின் பக்கத்து வீட்டை சேர்ந்த சமையல் தொழிலாளி கோவிந்தசாமி 52 என்பவர் விபத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்தார்.சோளிங்கர் போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் 27 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி