உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ஜி.ஹெச்.,சில் வீல் சேர் இல்லை கழிப்பறைக்கு தாயை சுமந்த மகன்

ஜி.ஹெச்.,சில் வீல் சேர் இல்லை கழிப்பறைக்கு தாயை சுமந்த மகன்

அரக்கோணம்:அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாததால், தாயை மகன் கழிப்பறைக்கு துாக்கிச்சென்ற அவலம் நடந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ஒருவர், தன் தாயை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தாயை கழிப்பறைக்கு அழைத்து செல்ல, மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லை. இதனால், அவர் தாயை கழிப்பறைக்கு துாக்கி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. நோயாளிகள் கூறுகையில், 'அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை. 'இங்கு, அவசர காலத்தில் வரும் நோயாளிகளை உடனடியாக திருவள்ளூர் அல்லது வேலுார் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்து அனுப்பி விடுகின்றனர். நோயாளிகளிடம் செவிலியர்கள், ஊழியர்கள் ஒருமையில் பேசுகின்றனர். ' அவர்கள் ஒரே மருத்துவமனையில் நீண்ட காலம் பணி செய்வதால், இதுபோன்ற அலட்சிய செயல்களில் ஈடுபடுகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை