மேலும் செய்திகள்
வங்கியில் மோசடி ஊழியர் கைது
25-Nov-2025
டூ வீலர் - கார் மோதல் மூன்று வாலிபர்கள் பலி
21-Nov-2025
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
10-Nov-2025
வாலாஜாபேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி சீனிவாசன், 40. இவர், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழில் செய்து வந்தார். அதே பகுதி சகோதரர்களான சமையல் மாஸ்டர் தொழில் செய்யும் பிரகாஷ், 40, கிருஷ்ணன், 38. இவர்களும் மந்திரம் போடும் தொழில் செய்து வந்தனர்.இதில், இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த, 30ல், சீனிவாசனை, பிரகாஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் அவர்களது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, சுத்தியால் தலையில் அடித்தனர்.அதில், வலி தாங்க முடியாமல் கூச்சலிட்ட சீனிவாசனுக்கு தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். வாலாஜபேட்டை போலீ சார், பிரகாஷ், கிருஷ்ணனை கைது செய்தனர்.
25-Nov-2025
21-Nov-2025
10-Nov-2025