உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு ரயில்கள் ஒரு மணிநேரம் தாமதம்

அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு ரயில்கள் ஒரு மணிநேரம் தாமதம்

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 4-வது நடைமேடையில், சென்னை நோக்கி செல்லும் பாதையில் நேற்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சிக்னல் கிடைக்காததால், நடைமேடைகளில் சென்னை செல்லும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன. காலை 6:00 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய புறநகர் ரயில் மற்றும் 6:20, 6:50 மணிக்கு புறப்பட வேண்டிய மூன்று ரயில்கள் நிறுத்தப்பட்டன.இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்னை நோக்கி செல்ல வேண்டிய பயணியர் கடும் அவதிப்பட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த ரயில் பயணியர், அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு 7:10 மணிக்கு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை