உதவி பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கைபெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை
உதவி பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கைபெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கைஓமலுார்:பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அதன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க அறிக்கை:சேலம், பெரியார் பல்கலையில் தகுதியான, 55க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு நடவடிக்கை, 3 மாதங்களாக நடந்து வருகிறது. பல்கலை மானிய குழு, அரசின் அரசாணைப்படி, விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விரைவில் நேர்காணல் நடக்க உள்ளது. இந்த நடவடிக்கை, விதிப்படி நடந்து வரும் நிலையில்,பல்கலையில் பணிபுரியும் உதவி பேராசிரியர் வைத்தியநாதன், தொடர்ந்து உண்மைக்கு மாறான அவதுாறுகளை, பொது வெளியில் பரப்பி வருகிறார். வகுப்பறையில் ஒழுங்கீன நடவடிக்கை, மாணவர்களிடம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட செயல்பாடுகளால், வைத்தியநாதன் மீது நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதில் சென்னை உயர் நீதிமன்றமும், நிர்வாகம் எடுத்த தகுதி இறக்க நடவடிக்கையை உறுதிப் படுத்தி உள்ளது. இவற்றை எல்லாம் திசைதிருப்ப, அவர் இதுபோன்ற அவதுாறுகளை பரப்பி வருகிறார்.பல்கலை நிர்வாக நடவடிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும்படியும், பெரும்பான்மை ஆசிரியர்களின் நலனுக்கு எதிராகவும் செயல்படும் வைத்தியநாதன் மீது, பல்கலை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சங்கம் சார்பில் முதல்வர், தலைமை செயலர், உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலர், பல்கலை துணைவேந்தருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.