உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன் வினியோகம் ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன் வினியோகம் ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 22 வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகர் பகுதியில், பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் விழா நேற்று நடந்தது. மேயர் சத்யா தலைமை வகித்தார். பொது சுகாதார குழு தலைவரும், அந்த வார்டு கவுன்சிலருமான மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வழங்கினார். முன்னதாக, முனீஸ்வர் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், அரிசி, பருப்பு, பாமாயில் உட்பட அனைத்து உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து, எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆய்வு செய்தார். துணை மேயர் ஆனந்தய்யா, முனீஸ்வர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் ரவி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தனலட்சுமி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஞானசேகரன், வனவேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை