உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் அரசு மருத்துவமனையில்லிப்ட் பழுதால் நோயாளிகள் அவதி

ஆத்துார் அரசு மருத்துவமனையில்லிப்ட் பழுதால் நோயாளிகள் அவதி

ஆத்துார் அரசு மருத்துவமனையில்'லிப்ட்' பழுதால் நோயாளிகள் அவதிஆத்துார், :ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு தினமும், 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதில், 4 மாடி கொண்ட புது கட்டடத்தில் அவசர சிகிச்சை, முதல்வரின் காப்பீடு திட்ட வார்டு, பெண்கள், ஆண்கள் வார்டுகள் உள்ளன.ஆனால் அங்குள்ள, 12 பேர் செல்லும்படியான, 'லிப்ட்', 2 வாரங்களுக்கு முன் பழுதான நிலையில், இதுவரை சரிசெய்யவில்லை. இதனால் நோயாளிகளை லிப்டில் அழைத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருதயம் உள்ளிட்ட பாதிப்புகளில், 4வது மாடியில் படுக்கையில் அனுமதிக்கப்பட்டவர்கள், படி வழியே தடுமாறியபடி செல்ல வேண்டியுள்ளது. மேலும் முதியவர்களும் படி வழியே சென்று சிரமப்படுகின்றனர்.இதனால், 'லிப்ட்' இயக்கும்போது அதற்கான பணியாளர் நியமித்து, நோயாளிகள் பாதுகாப்பான முறையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தினர்.இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி கூறுகையில், ''லிப்டில் செல்லும்போது சிலர், தவறான பட்டன் அழுத்திவிடுவதால் பழுதாகி விடுகிறது. தற்போது பராமரிப்பு பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி