உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் பெண் பயணியர் பாதுகாப்புக்குசேலத்தில் வாட்ஸாப் குழு அறிமுகம்

ரயிலில் பெண் பயணியர் பாதுகாப்புக்குசேலத்தில் வாட்ஸாப் குழு அறிமுகம்

ரயிலில் பெண் பயணியர் பாதுகாப்புக்குசேலத்தில் 'வாட்ஸாப்' குழு அறிமுகம்சேலம் : சேலம் ரயில்வே ஸ்டேஷனில், 'சேலம் ரயில்வே பெண் பயணிகள் பாதுகாப்பு குழு' எனும் வாட்ஸாப் குழு அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் குமார் தலைமை வகித்தார். அதில் கோவை ரயில்வே டி.எஸ்.பி., பாபு, ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டோ செல்லப்பா, புது குழுவை அறிமுகப்படுத்தினர்.தொடர்ந்து பாபு பேசுகையில், ''பெண்கள் அச்சமின்றி இருக்கவும், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள், பயணிக்கும்போது தெரிந்தால் உடனே குழுவில் தெரிவித்தால் அந்த இடத்தில் இருக்கும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார். ரயில்வே உதவி நிலைய மேலாளர் வேல்முருகன், பெரியார் பல்கலை நிர்வாக அலுவலர் வெண்ணிலா உள்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'குழுவில் தினமும் பயணம் செய்யும் பயணியரின் எண்கள் இணைக்கப்பட்டு, அவர்களே, 'அட்மின்' ஆக இருக்கும்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.ஏதேனும் குற்றங்கள் குறித்து தெரிவித்தால் குழுவில் பதிவிடவும், புது பயணியரை இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றங்களை தடுக்க அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மார்க்கத்துக்கும் தனித்தனியே குழுக்கள் உள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ