உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்கசிவால் கூரை வீட்டில் தீ விபத்துபணம் உள்பட ரூ.6 லட்சத்துக்கு சேதம்

மின்கசிவால் கூரை வீட்டில் தீ விபத்துபணம் உள்பட ரூ.6 லட்சத்துக்கு சேதம்

மின்கசிவால் கூரை வீட்டில் தீ விபத்துபணம் உள்பட ரூ.6 லட்சத்துக்கு சேதம்தலைவாசல்:தலைவாசல் அருகே தியாகனுார் ஊராட்சி தெற்கு தியாகனுாரை சேர்ந்தவர் சுப்ரமணி, 50. இவரது மனைவி நாகம்மாள், 45. மரம் ஏறும் தொழிலாளியான இவர்கள், நேற்று மாலை, 6:00 மணிக்கு கூரை வீட்டில் இருந்தனர். அப்போது, மின்கசிவால் தீப்பற்றியது.இதுகுறித்து, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு, மாலை, 6:05க்கு தகவல் அளித்தனர். 6:30க்கு அங்கு வந்த வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.ஆனால் வீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கட்ட வைத்திருந்த, 1.35 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 6.5 பவுன் நகை, 'டிவி', மிக்சி, கிரைண்டர், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட, மொத்தம், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாகின.தவிர வீடு அருகே நிறுத்தியிருந்த செந்தில் என்பவரது கன்டெய்னர் லாரியின் ஒரு பகுதி சேதமடைந்தது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை