உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருமணிமுத்தாற்றை துாய்மையாக மக்களுக்கு அர்ப்பணிப்போம்

திருமணிமுத்தாற்றை துாய்மையாக மக்களுக்கு அர்ப்பணிப்போம்

சேலம்: அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், திருமணிமுத்தாற்றங்கரை மக்கள் இணைந்து, 'திருமணிமுத்தாறு திருவிழா'வை நேற்று தொடங்கி, வரும், 26 வரை நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம், அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில், 'திருமணிமுத்தாறு திருவிழா' மாநாடு நேற்று காலை தொடங்கியது. சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலர் யதாத்மானந்த மஹராஜ் கொடியேற்றினார். அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்த மகராஜ் முன்னிலை வகித்தார். இணை செயலர் சிவராமானந்தா வரவேற்றார். கோவை, பேரூராதீனம் குருமஹா சந்நிதானத்தின் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்தார்.அதில், சிரவையாதீனம் குருமஹா சந்நிதானத்தின் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், ''திருமணிமுத்தாறு திருவிழா செய்து துாய்மையான ஆறாக மக்களுக்கு பயன்பெறும்படி அர்ப்பணிப்போம்; 12 நாட்கள் விழா எடுத்து ஆற்றின் பெருமையை உலகறிய செய்வோம்,'' என்றார். ஏராளமான சந்நியாசிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து கோட்டை மாரியம்மன் பின்புறம் உள்ள திருமணிமுத்தாற்றில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். அதில், 5 சன்னியாசிகள் சிறப்பு பூஜை செய்து மகா ஆரத்தி எடுத்தனர். ஒடிசா மாநில பிரஜா சேவாஸ்ரம் உதயானந்தா பர்பத் மஹராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ