உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பறிமுதல்தந்தை - மகன் கைது

புகையிலை பறிமுதல்தந்தை - மகன் கைது

சேலம், :சேலம், மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 65. இவரது மகன் மாதேஸ்வரன், 38. இருவரும் வீடு அருகே மளிகை கடை நடத்துகின்றனர். அங்கு அன்னதானப்பட்டி போலீசார் கண்காணித்த நிலையில், மளிகை கடை எதிரே ஒரு அறையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அங்கு போலீசார் நேற்று சோதனை செய்து, குட்கா, ஹான்ஸ் உள்பட, 50,000 ரூபாய் மதிப்பில், 22 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தந்தை, மகனையும் கைது செய்தனர்.அதேபோல் நடுவலுார், பள்ளக்காட்டை சேர்ந்த பழனிமுத்து, 66, மளிகை கடையில், கெங்கவல்லி போலீசார் நேற்று ஆய்வு செய்தபோது, 12 பாக்கெட்டுகளில் புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால் பழனிமுத்துவை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை