உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பொருள் விற்ற காய்கறி வியாபாரி கைது

புகையிலை பொருள் விற்ற காய்கறி வியாபாரி கைது

புகையிலை பொருள் விற்ற காய்கறி வியாபாரி கைதுசேலம்,: சேலம், வீராணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுாரில் போதை பொருள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. வீராணம் போலீசார், அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த, காய்கறி வியாபாரி கிருபா, 34, என்பதும், பெங்களூருவில் இருந்து காய்கறி வாங்கி விற்பதாகவும் தெரிவித்தார். சந்தேகம் அடைந்து அவரது பையை சோதனையிட்டதில், 7 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில், 4 ஆண்டுகளாக, கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்று வந்தது தெரிந்தது. இதனால் அவரை கைது செய்த போலீசார், அவருக்கு வினியோகித்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை