அரசு பொறியியல் கல்லுாரியில்உள்விளையாட்டு அரங்கம் திறப்பு
அரசு பொறியியல் கல்லுாரியில்உள்விளையாட்டு அரங்கம் திறப்புஓமலுார்:சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 8.65 கோடி ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம், கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தரை, முதல் தளம் என, 42,139 சதுரடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறையுடன் கூடிய இரு தங்குமிடம், 4 பயிற்சியாளர் அறைகள், பொருட்கள் சேமிப்பு அறை, உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், இறகு பந்தாட்டம் ஆகிய மைதானங்கள் அடங்கியுள்ளன. வீரர், வீராங்கனையருக்கு தனித்தனியே கழிப்பறை வசதிகள், முதல் தளத்தில் போட்டியை அமர்ந்து பார்க்கும்படி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை, சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார். பின், வீரர், வீராங்கனையர் விளையாட்டை தொடங்கிவைத்து பார்வையிட்டார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, கல்லுாரி முதல்வர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.