நடந்து சென்றவர் மீது மோதிமொபட்டில் சென்றவர் பலி
நடந்து சென்றவர் மீது மோதிமொபட்டில் சென்றவர் பலிவாழப்பாடி:வாழப்பாடி, காட்டுவேப்பிலைப்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி முருகன், 39. இவரது வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நரேஷ்குமார், 21, வாடகைக்கு தங்கி, அப்பகுதியில் உள்ள, தனியார் நுாற்பாலையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, சேசன்சாவடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில், நரேஷ்குமார் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, 'ஆக்டிவா' மொபட்டில் வந்த முருகன், நரேஷ்குமார் மீது மோதியுள்ளார். இதில் தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்த முருகனை, மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார்.நரேஷ்குமார், லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து நுாற்பாலை சூப்பர்வைசர் வேலவன் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரித்ததில், ஹெல்மெட் அணியாமல் சென்ற முருகன் தலையில் பலத்த அடிபட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.