போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட முயற்சி
சேலம், :சேலம் அருகே மூங்கில்பாடி ஊராட்சி சேனைகவுண்டனுாரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது வீடு முன் ெஷட் அமைத்துள்ளார். அங்கு சாக்கடை கால்வாய் அமைக்க உள்ளதாக கூறி பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு ரங்கநாதன் எதிர்த்தார். இதில் மோதல் ஏற்பட்டு ரங்கநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருப்பூர் போலீசார் இருதரப்பினர் மீது வழக்குப்பதிந்தனர். அதன்படி ரங்கநாதன் புகாரில் ராஜா உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எதிர்தரப்பினர் புகார்படி, ரங்கநாதன் தரப்பில் கண்ணன், சின்னதுரை கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 10 ரூபாய் இயக்கம் சார்பில் கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனை, நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது பேச்சு நடத்திய போலீசார், 'தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர். இதனால் அந்த இயக்கத்தினர், கமிஷனர் அலுவலகம் சென்றனர். அங்கு தொடர்ந்து விசாரணை நடக்கிறது.