தேசிய கீதம் புறக்கணிப்புகல்வி அலுவலர் விசாரணை
தேசிய கீதம் புறக்கணிப்புகல்வி அலுவலர் விசாரணைஇடைப்பாடி : இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 160க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, நேற்று முன்தினம் தேசிய கீதம் பாடப்படாமல், இறைவணக்க கூட்டம் நிறைவு பெற்றது. இதுகுறித்து நேற்று, காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனால், சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள், நேற்று இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியை விஜயாவிடம் விசாரித்தார். அதன் அறிக்கையை, முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.