உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாகர் கோவில் பண்டிகைபொங்கல் வைத்து வழிபாடு

நாகர் கோவில் பண்டிகைபொங்கல் வைத்து வழிபாடு

நாகர் கோவில் பண்டிகைபொங்கல் வைத்து வழிபாடுஓமலுார்,:ஓமலுார் அருகே தொளசம்பட்டியில் உள்ள நாகர் சுவாமி, முத்துக்குமார சுவாமி கோவில் பண்டிகை நேற்று தொடங்கியது. காலையில், தொளசம்பட்டி தெப்பக்குளத்தில் தொடங்கிய ஊர்வலத்தில், வெள்ளி கவசத்தில் நாகர் சுவாமி, முத்துக்குமார சுவாமி, வெள்ளி மயில் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி வீதி, வீதியாக வலம் வந்தனர். தொடர்ந்து ஏரிக்கரை முழுதும், திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று நாகர், முத்துக்குமார சுவாமிகளுக்கு மகா தீபாராதனை, நாளை முத்துகுமார சுவாமி பூந்தேர் ஊர்வலம், அலகு குத்துதல், 14ல் நாகர் சுவாமிக்கு மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை