பி.டி.ஓ., வளாக சுவர் சேதம்குடிமகன்கள் அட்டகாசம்
பி.டி.ஓ., வளாக சுவர் சேதம்'குடி'மகன்கள் அட்டகாசம்மகுடஞ்சாவடி:மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலகம், புள்ளியியல், ஒன்றிய பொறியியல், மகளிர் குழு ஆகிய அலுவலகங்கள் உள்ளன. அந்த வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் உள்ளது.ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது, மகளிர் குழு அலுவலகம் அருகே, இரு இடங்களில் சுவர் இடிந்து இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் உள்ளிட்டவை உள்ளே புகுந்து விடுகின்றன. இரவில், 'குடி'மகன்கள் புகுந்து, மது அருந்திவிட்டு காலி பாட்டில்கள், டம்ளர்களை வீசிச்சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுச்சுவரை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., சந்திரமலர் கூறுகையில், ''புது பி.டி.ஓ., அலுவலகம் கட்ட திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம். அதற்கு ஒப்புதல் கிடைத்தால், புதிதாக கட்டப்படும். இல்லையெனில் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படும்,'' என்றார்.