உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதி ஆசனவாயில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

கைதி ஆசனவாயில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

கைதி ஆசனவாயில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்சேலம் :நாமக்கல் மாவட்டம் கரடிப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 25. வழிப்பறி வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில், கடந்த செப்டம்பரில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் நாமக்கல் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று, மீண்டும் போலீசார், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சிறை போலீஸ் மவுலீஸ்வரன், நரேஷ்குமார் சோதனை செய்தபோது அவரது ஆசனவாயிலில், சாதாரண மொபைல் போன், 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறை எஸ்.பி., வினோத் விசாரித்ததில், 'சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி தினேஷ், 36, என்பவர், மொபைல், கஞ்சா கொண்டு வந்தால், 15,000 ரூபாய் தருவதாக தெரிவித்தார்' என்றார். மொபைல், கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர், சூர்யா, தினேஷ் ஆகியோர், 2 மாதங்கள் உறவினர்களை சந்திக்க, எஸ்.பி., தடை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி