கால்பந்து மாணவர்களுக்குஊக்கத்தொகை வழங்கல்
கால்பந்து மாணவர்களுக்குஊக்கத்தொகை வழங்கல்சேலம்:சேலம், கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 மாணவர் அருண், பிளஸ் 1 மாணவர் அஸ்வின், 10ம் வகுப்பு படிக்கும் தரணிஷ், மாவட்ட கால்பந்து அணியில் பங்கேற்றனர். பின் முதல்வர் கோப்பை மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும், பிளஸ் 1 மாணவர் தீனா, பிளஸ் 2 மாணவர் அருண், இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய விளையாட்டு போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.இந்த மாணவர்கள், சேலம், அஸ்தம்பட்டியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்களுக்கு ஊக்கத்தொகை, 25,000 ரூபாயை, அமைச்சர் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கற்பகவள்ளி, உடற்கல்வி இயக்குனர் கொங்குவேல் உடனிருந்தனர்.