உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்

மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்

மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்ஆத்துா:ஆத்துார், பைத்துாரை சேர்ந்த துரை மகன் அபி ேஷக், 19. சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ,, 2ம் ஆண்டு படிக்கிறார். சிவகங்கை மாவட்டம், குருவிகொண்டன்பட்டியை சேர்ந்த, கருப்பையா மகள் மகாலட்சுமி, 19. இவர் அங்குள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., 2ம் ஆண்டு படிக்கிறார். இவர்கள், 'இன்ஸ்ட்ராகிராம்' மூலம் பழகி காதலித்தனர். கடந்த பிப்., 17ல், வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் தங்கியிருந்தனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். மாணவியின் குடும்பத்தினர் ஏற்காததால், அபிேஷக்குடன் மகாலட்சுமியை, போலீசார் அனுப்பி வைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை