உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை

பனமரத்துப்பட்டி, வீரபாண்டி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., பிஎல்ஏ-2 ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், அமானிகொண்டலாம்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்தது.வீரபாண்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜமுத்து தலைமை வகித்தார். சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் இளங்கோவன் பேசியதாவது:ஒரு புறம் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் எஸ்.ஐ.ஆர்., பணியை, தி.மு.க.,வினர் எதிர்த்தாலும், மறுபுறம் பிஎல்ஏ-2 நியமித்து, ஓட்டு சேர்த்தல், நீக்கல் பணி செய்கின்றனர். தி.மு.க.,வினர் இரட்டை வேடம் போடுகின்றனர். நாம் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று எஸ்.ஐ.ஆர்.,பணியை கவனத்துடன் செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் பனமரத்துப்பட்டி கிழக்கு பாலச்சந்திரன், மேற்கு ஜெகநாதன், வீரபாண்டி வருதராஜ், வெங்கடேசன், சேலம் செல்வபிரகாஷ், நகர செயலாளர்கள் பனமரத்துப்பட்டி சின்னதம்பி, மல்லுார் பழனிவேலு, ஆட்டையாம்பட்டி மாதேஸ், இளம்பிள்ளை கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை