கொலை வழக்கில் தேடப்பட்டவர் 16 ஆண்டுக்கு பின் சுற்றிவளைப்பு
கொலை வழக்கில் தேடப்பட்டவர் 16 ஆண்டுக்கு பின் சுற்றிவளைப்புஓமலுார் :கருப்பூர் அருகே உள்ள தாபாவில், 2009ல் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே மேம்பாலத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், திருப்பூரை சேர்ந்த மோசஸ் சாலமன் உள்பட, 2 பேர் கைது செய்யப்பட்டு, ஓமலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அதில் ஜாமினில் வந்த மோசஸ் சாலமன், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். 16 ஆண்டாக தேடப்பட்ட நிலையில், அவர் ஊட்டியில் இருப்பதாக, ஓமலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், நேற்று மோசஸ் சாலமனை கைது செய்தனர்.