உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருச்சி மண்டலத்தில் நிரம்பும் நிலையில் 925 ஏரிகள்

திருச்சி மண்டலத்தில் நிரம்பும் நிலையில் 925 ஏரிகள்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் நிரம்பும் நிலையில் உள்ளதால், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளன் குமார், நேற்று ஆய்வு செய்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்துள்ளது. அணை பூங்காவை சீர-மைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளோம். விரைவில் சீரமைக்-கப்படும். நடப்பாண்டு மேட்டூர் அணை, 2ம் முறை நிரம்பும் என நம்புகிறோம். தமிழகத்தில் காவிரி பாயும், 13 மாவட்டங்களில், விவசாயிகள், 17 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். திருச்சி மண்டலத்தில், 925 ஏரிகள் உள்ளன. தொடர் மழையால் அனைத்து ஏரிகளும், 95 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அவர், அணை முனியப்பன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, பூங்கா, கால்வாய் மதகுகள், வலது கரை பகுதி-களை பார்வையிட்டார். அணை கண்காணிப்பு பொறியாளர் சிவ-குமார், மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ